என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் ஆக நடிக்கும் வெற்றி
‘வெப்’ படத்தை இயக்கிய ஹாரூண் அடுத்ததாக இயக்கியுள்ள படம் ‘பரீட்’. இதில் ஹீரோவாக வெற்றி நடிக்க, ஹீரோயினாக அக்ஷிதா மற்றும் சாந்தினி தமிழரசன் நடிக்கின்றனர். மேலும் பாலாஜி சக்திவேல், சிங்கம் புலி, சரவண சுப்பையா, ஜென்சன் திவாகர், கோடாங்கி வடிவேலு உட்பட பலர் நடித்துள்ளனர்.ஜான் ராபின்ஸ் இசை அமைக்க, இந்த படத்தை டிரீம் ஹவுஸ் நிறுவனம் மற்றும் ஜெயின் கிரியேஷன்ஸ் சார்பில் ஹாரூன் மற்றும் மஹேந்தர் குமார் இணைந்து தயாரித்துள்ளனர்.என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்டான போலீஸ் அதிகாரி ஒருவர் தன்னுடைய பணியில் என்னென்ன சவால்களை எதிர்கொள்கிறார்.அதனால் அவரது குடும்ப வாழ்க்கை யில் எந்தவித பாதிப்புகளை சந்திக்கிறார், அதிலிருந்து எப்படி மீள்கிறார் என்பதை மையப்படுத்தி இன்வெஸ்டிகேஷன் திரில்லராக உருவாகி உள்ளது.
Prev Post