Take a fresh look at your lifestyle.

இலங்கை போரில் சிக்கி தவிக்கும் குடும்பத்தின் கதை

18

இலங்கை போரில் சிக்கி தவிக்கும் குடும்பத்தின் கதை
ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ சார்பில் கார்த்திக் சுப்புராஜ் மற்றும் கார்த்திகேயன் சந்தானம் தயாரிக்க, சோமிதரன் இயக்கி உள்ள படம் ‘நீளிரா’. இதில் நவீன் சந்திரா, சனந்த், ரூபா கொடுவாயூர், கபிலா வேணு, ‘கயல்’ வின்சென்ட், விது, ரோஹித் கோகா ட்டே, நவயுகா, சிது குமரேசன்,ஸ்வாதி கிருஷ்ணா ஆகியோர் நடித்துள்ளனர். செல்வரத்னம் பிரதீபன் ஒளிப்பதிவு செய்ய, கே இசையமைத்துள்ளார். இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு போர் சூழலில் திருமணம் நடைபெறுவதற்காக மணமக்கள், இரு வீட்டார், உறவினர்கள், நண்பர்கள் ஆகியோர் எதிர்கொள்ளும் சவால்களை பின்னணியாக கொண்டு சர்வைவல் திரில்லராக தயாராகி இருக்கும் இப்படம் ஏப்ரல் 3ம் தேதி வெளியாகிறது.இப்படத்தை தமிழகம் முழுவதும் ஏஜிஎஸ் நிறுவனமும், வெளிநாடுகளில் அஹிம்சா நிறுவனமும் வழங்குகின்றன.