இன்ஸ்டா பிரபலங்கள் நடிக்கும் ‘லவ் 3.0 ‘
ராஜேஷ்வி.கே. இயக்கத்தில் உருவாகி யுள்ள படம் ‘லவ் 3.0.’ இதை மங்கி மைன்ட்ஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் சிவக்குமார் தயாரித்துள்ளார். சினிமா மீதுள்ள ஆர்வத்தினால் புதிதாக ஏதாவது செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் இன்ஸ்டாகிராம் மூலம் மக்களிடம் பிரபலமாக இருப்பவர்களை வைத்து இந்த படத்தை தயாரித்துள்ளார். சோசியல் மீடியாவில் ரீல்ஸ் அக்கா என்று அழைக்கப் படும் அரனிகா ஹீரோயினாக நடிக்கிறார். அதேபோல் ஹீரோவாக இன்ஸ்டா பிரபலம் 2 பேர் நடிக்கின்றனர். ஒருவர் கோயம்புத்தூர் மாப்ள, இன்னொருவர் கார்த்திகேயன். இந்தப் படத்திற்கு வைகுந்த சீனிவாசன் இசையமை த்துள்ளார்.இதன் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் சென்னையில் நடந்த விழாவில் வெளியிடப்பட்டது.
Next Post