காளிதாஸ் 2 பட விழாவில் ஒலித்த பூவே உனக்காக பாடல்
ஸ்ரீ செந்தில் இயக்கத்தில் பரத் நடித்துள்ள படம் காளிதாஸ் 2. இந்தப் படத்தை ஸ்கை பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் பைவ்ஸ்டார் செந்தில் டாக்டர் என். யோகேஸ்வரன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.மேலும் இதில் அஜய் கார்த்தி, பிரகாஷ்ராஜ்,கிஷோர்,சங்கீதா,பவானி ஸ்ரீ, அபர்ணதி உள்பட பலர் நடித்துள்ளனர். வரும் ஏப்ரல் 3-ந் தேதி வெளியாகும் இந்த படத்திற்கு சாம் சி. எஸ். இசையமைத்துள்ளார். இதன் இசை, ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் பங்கேற்ற நடிகை சங்கீதா பேசியது, எனக்கு மிகவும் பிடித்த இந்ததுறைக்குள் மீண்டும் அழைத்ததற்கு
இயக்குனருக்கு ரொம்ப நன்றி. இந்தப் படம்மிகப்பெரிய வெற்றி பெறும் என்றார். பின்னர் பூவே உனக்காக படத்தில் இடம் பெற்ற சொல்லாமலே பாடலுக்கு நடனம் ஆடும்படி தொகுப்பாளினி கேட்க, உடனே 25 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த பாடலுக்கு மேடையில் நடனமாடி அசத்தினார் சங்கீதா.
Prev Post
Next Post