மணிரத்னம் இயக்கத்தில் சாய் பல்லவி
தக்லைப் படத்திற்குப் பிறகு மணி ரத்னம் அடுத்ததாக இயக்க இருக்கும் படம் குறித்து அதிகாரப்பூர்வ ஒரு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த படத்தை லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறது.இதில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்த, சாய் பல்லவி ஹீரோயின் ஆக நடிக்கிறார். ஏற்கனவே அமரன் பட விழாவில் மணிரத்னம் பேசும் போது நான் சாய் பல்லவியின் ரசிகன். விரைவில் அவருடன் இணைந்து பணிபுரிவேன் என கூறியிருந்தார். அது தற்போது நிறைவேறி உள்ளது. படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கிறார். படம் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும்.
Next Post