வேதிகாவின் அர்ப்பணிப்பு வேற லெவல்
தமிழ், தெலுங்கு,மலையாள திரை உலகில்பிரபல நடிகையாக இருப்பவர் வேதிகா. கடந்தாண்டு பயம் படத்தில் நடித்திருந்தார்.சமீபத்தில் யாக்ஷினி ஓடிடி தொடரில் நடித்தார். தற்போது பேட்ட ராப், கஜானா, விநோதன் ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். இந்த நிலையில் அவர் அளித்த பேட்டியில், எனது சமீபத்திய படங்களின் கேரக்டர்கள் மிக அழுத்தமானது. ‘சுல்தான்’ பாடல் சரியான நேரத்தில் எனக்கு கிடைத்தது.அந்த பாடலுக்கு ஷோபி மாஸ்டர் தான் நடன இயக்குநர். பாடல் ஷூட்டிங் நடந்தபோது எனக்கு 102 டிகிரி காய்ச்சல். படப்பிடிப்பு தளத்தில் இருந்தஉற்சாகம் என்னை சுறுசுறுப்பாக ஆட வைத்தது. ஷூட்டிங் முடிந்தவுடன் அனைவரும் என்னை பாராட்டினர்.
Prev Post
Next Post