பிரிந்த ஜோடி மீண்டும் சேர்ந்தது
இயக்குனர் பிரியதர்ஷனும், நடிகை லிசியும் கடந்த 1990-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.இவர்களுக்கு கல்யாணி, சித்தார்த் என்ற மகளும், மகனும் உள்ளனர்.திருமணமாகி 24 ஆண்டுகளுக்கு பிறகு 2015-ம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்றனர். இந்த நிலையில் 10 ஆண்டுக்கு பிறகு சில மாதங்களுக்கு முன்பு இயக்குனர் சிபி மகனின் திருமணத்திற்கு இருவரும் ஒன்றாக வந்திருந்தனர்.இந்த போட்டோஸ் இணையத்தில் வெளியாகி வைரலானது. அதோடு மீண்டும் இருவரும் சேர்ந்து விட்டதாக தகவல் பரவியது. இந்த நிலையில்
பிரியதர்ஷன் கூறியது, ‘நாங்கள் மீண்டும் திருமணம் செய்து கொள்ளும் திட்டம் எதுவும் இல்லை. ஆனால் 8 மாதங்களுக்கு முன்பே ஒன்றாக வாழ முடிவு செய்து விட்டோம். கல்யாணி மற்றும் சித்தார்த்த் இருவரும் தாய் தந்தை சேர வழி செய்ததாக கூறினார்.
Prev Post
Next Post