4 நாளில் 761 கோடி வசூல் செய்த துரந்தர்-2
உலகம் முழுவதும் 1300 கோடிக்கு மேல் வசூலை குவித்த துரந்தர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதன் 2ம் பாகமான துரந்தர்-2 (பழிவாங்கல்) படம் கடந்த 19ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. முதல் பாகத்தை போலவே இந்த படமும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வசூலையும் குவிக்க தொடங்கியது. இதுவரை வேறு எந்த படமும் செய்யாத அளவுக்கு முதல் நான்கு நாட்களிலேயே 500 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இந்தியா மற்றும் வெளிநாடுகள் என மொத்தமாக 761 கோடியை இந்த படம் அள்ளி உள்ளது. இதன் மூலம் முதல் வாரத்திலே யே ஆயிரம் கோடியை கடந்து புதிய சாதனை படைக்கவும் வாய்ப்பு இருப்பதாக சினிமா ஆர்வலர்கள் தெரிவிக்கின்றன.