ராதிகாவுக்கு உலகநாயகி பட்டம்
அறிமுக இயக்குநர் விஷ்ணு எடவன் இயக்கத்தில், கவின் மற்றும் நயன்தாரா இணைந்து நடித்துள்ள படம் “ஹாய்”. இதில் நடிகை ராதிகா மற்றும் இயக்குனர் பாக்யராஜ் முக்கிய கேரக்டரில் நடித்து வருகின்றனர். இந்த நிலையில் நடிகை ராதிகா திரை உலகத்துக்கு வந்து 49 ஆண்டுகள் ஆனதை ஒட்டி அவருக்கு படக்குழு சார்பில் வாழ்த்து தெரிவித்து ஆளுயர மாலை அணிவித்தனர். அதோடு கேக் வெட்டி இந்த சாதனையை கொண்டாடியதோடு அவருக்கு உலகநாயகி என்ற பட்டத்தையும் வழங்கி உள்ளனர். அவருக்கு நயன்தாரா முத்தமிட்டு வாழ்த்து தெரிவித்தார். கவின் மற்றும் பட குழுவினர் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். இந்த படத்தை ‘7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ்’ மற்றும் ‘ரௌடி பிக்சர்ஸ்’ ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்க, ஜென் மார்டின் இசையமைக்கிறார்.
Prev Post
Next Post
