Take a fresh look at your lifestyle.

சயின்ஸ் கிரைம் இன்வெஸ்டிகேஷன் திரில்லர் படம் ’கைமேரா’

87

சயின்ஸ் கிரைம் இன்வெஸ்டிகேஷன் திரில்லர் படம் ’கைமேரா’
பரமு, செல்பிஷ் படங்களை இயக்கிய மாணிக் ஜெய் இயக்கத்தில் மூன்றாவதாக உருவாகியுள்ள படம் ‘கைமேரா’.இதில் எத்திஷ் ஹீரோவாக அறிமுகம் ஆகிறார்.
ஹீரோயின்களாக சௌமியா, கிருஷ்ண நந்து, ஞானேஸ்வரி ஆகிய மூன்று பேர் நடிக்கின்றனர்.படத்துக்கு வினோத் ஒலி பதிவு செய்ய விக்னேஷ் ராஜா இசை அமைத்துள்ளார். மனித உடம்புக்குள் மிருகங்களின் செல்கள் புகுத்தப்பட்டால், மனிதனின் குணம் மிருகக் குணமாக மாறினால் அதன் தாக்கம் எப்படி இருக்கும் என்பதை மையமாக வைத்து சயின்ஸ் கிரைம் இன்வெஸ்டிகேஷன் திரில்லராக சொல்லி உள்ளனர்.கைமேரா என்றால் மராத்திய மொழியில் மரபணுக்கள் மாற்றம் என பொருள்.