Take a fresh look at your lifestyle.

திறமையான நடிகர்களை தேடும் “ஸ்கார்”படக்குழு

5

திறமையான நடிகர்களை தேடும் “ஸ்கார்”படக்குழு
‘கிறிஸ்டினா கதிர் வேலன்’ படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இயக்குனர் அலெக்ஸ் பாண்டியன், அடுத்து ஸ்கார் (தழும்பு )எனும் படத்தை இயக்க உள்ளார். ஸ்ரீ லக்ஷ்மி ட்ரீம் பேக்டரி சார்பில் ஆர். பிரபாகர் ஸ்தபதி மற்றும் ஜி மீடியா பிலிம் பேக்டரி உடன் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறார்.இந்த படத்தின் பூஜை சமீபத்தில் கோவை மருதமலை முருகன் கோவிலில் நடைபெற்றது இதில் முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து பல புது முகங்களை அறிமுகப்படுத்த உள்ளார். இதற்கான நடிகர் தேர்வு தற்போது சென்னை கோவை, திருச்சி மற்றும் மதுரை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதன் படப்பிடிப்பு ஆகஸ்ட் முதல் வாரத்தில் ஊட்டி,கேரளா வயநாடு, பெங்களூரு மற்றும் கனடா போன்ற இடங்களில் நடக்க உள்ளது.