பிளாஸ்ட் படம் ரூ76 கோடி வசூல் சுபாஷ் கே.ராஜ் இயக்கத்தில் அர்ஜூன்,
அபிராமி, பிரித்தி முகுந்தன் ஆகியோர் நடிப்பில் வெளிவந்த படம் ‘பிளாஸ்ட்’. ஏ.ஜி.எஸ்.நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ரவிபசூர் இசையமைத்து ள்ளார்.25 வருடத்திற்கு பிறகு அர்ஜூனுடன் அபிராமி மீண்டும் இணைந்து நடித்திருந்தார். படம் ரிலீசாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று தொடர்ந்து தியேட்டர்களில் அரங்கில் நிறைந்த காட்சியாக ஓடியது. இதனால் ரூ.10 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் தற்போது ரூ.76 கோடி அளவுக்கு வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
இதனால் தயாரிப்பு தரப்பு மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளது இதே இயக்குனருடன் மீண்டும் அடுத்த படம் தொடங்க பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறதாம்.
Prev Post