Take a fresh look at your lifestyle.

சமுத்திரக்கனி, பரத் நடித்துள்ள “வீரவணக்கம்”

158

சமுத்திரக்கனி, பரத் நடித்துள்ள “வீரவணக்கம்”
பிரபல மலையாளத் திரைப்பட இயக்குனர் அனில் வி. நாகேந்திரன் முதன்முறையாக தமிழில் இயக்கியுள்ள படம் “வீரவணக்கம்”. இதில் சமுத்திரக்கனி மற்றும் பரத் சேர்ந்து நடித்துள்ளனர்.இதில் முக்கியமான கேரக்டரில் நடிகை சுரபி லக்‌ஷ்மி நடித்திருக்கிறார். படம் குறித்து இயக்குனர் கூறியது,சம காலத்தில் நடைபெறும் சமூக அவலங்களும், கடந்த காலத்தில் நடந்த புரட்சிகளும் இந்த கதையில் முக்கியமான ஒரு கருத்தை நமக்கு உணர்த்தும் என்றார். சமீபத்தில் இப்படத்தின் பிரத்தியேகக் காட்சி பிரபலங்களுக்கு திரையிடப்பட்டது. படத்தைப் பார்த்து பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர். வரும் 29 ஆம் தேதி இப்படம் ரிலீஸ் ஆகிறது.