Take a fresh look at your lifestyle.

பொங்கலுக்கு வா வாத்தியார் படம் ரிலீஸ்

141

பொங்கலுக்கு வா வாத்தியார் படம் ரிலீஸ்
நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள வா வாத்தியார் படம் கடந்த டிசம்பர் 5ம் தேதி முதலில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. அதன் பிறகு 12ம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்காமல் படத்தை வெளியிடக் கூடாது என வழக்கு தொடரப்பட்டது. இதனால் சென்னை ஐகோர்ட் படத்தை வெளியிட தடை விதித்தது. இந்த நிலையில் பிரச்சனையை சுமூகமாக பேசி முடித்து படத்தை பொங்கல் பண்டிகைக்கு வெளியிட முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு வரும் 14ஆம் தேதி வா வாத்தியார் ரிலீஸ் ஆகும் என தயார் நிறுவனம் அறிவித்துள்ளது.