மொத ராத்திரி படம் பாக்யராஜ் படம் மாதிரி இருக்கு: கார்த்திக் சுப்புராஜ்
மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் ராஜா கருப்பசாமி இயக்கியுள்ள படம் மொத ராத்திரி. இதில் ரிஷிகாந்த், அனிஷ்மா அனில்குமார் ஆகியோர் வீடு ரோலில் நடித்துள்ளனர்.வரும் 21 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ள இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் தயாரிப்பாளர் ரவி சங்கர்,இயக்குநர்கள் ஏ. வெங்கடேஷ், ரவிக்குமார், கீர்த்தீஸ்வரன்,பாரி இளவழகன் ,ஸ்ரீகணேஷ் ,எடிட்டர் அசோக் அர்ஜூனன்,ஒளிப்பதிவாளர் சுரேஷ் பரஞ்சோதி,, இசையமைப்பாளர் பரத் சங்கர், நடிகர் சேத்தன்,நடிகை அனிஷ்மா, நடிகர் ரிஷிகாந்த் மற்றும் இயக்குநர் ராஜா கருப்பசாமி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இதில் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் பேசியது, ” ஒரு கதாபாத்திரத்தை உள்வாங்கி சிறப்பாக நடிப்பவர் ரிஷி. இந்தப் படத்தை பார்க்கும் பொழுது பாக்யராஜ் சாருடைய படம் பார்ப்பது போன்ற உணர்வு இருந்தது என்றார்.
Prev Post
Next Post
