டாக்ஸிக் படத்துக்கு ஏ சான்று
கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யஷ், நயன்தாரா, கியாரா அத்வானி உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் டாக்ஸிக். கேவிஎன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் வரும் 26ம் தேதி வெளியாக உள்ளது .இந்தப் படத்தின் கன்னட மொழிக்கான சென்சார் சான்றிதழ் நேற்று வழங்கப்பட்டுள்ளது. 3 மணி நேரம் 14 நிமிடங்கள் ஓடும் படத்திற்கு “ஏ” சான்றிதழ் வழங்கியுள்ளார்கள். இதனால், 18 வயதுக்குக் குறைவானவர்கள் படத்தைப் பார்க்க முடியாது.கன்னட மொழிக்கான தணிக்கை சான்றிதழை படம் வெளியாக உள்ள 10 நாட்களுக்கு முன்பே பெற்று விட்டார்கள். ஜனநாயகன் படம் தணிக்கை சான்றிதழ் அந்த அனுபவத்தின் காரணமாக கேவிஎன் மீடியா “டாக்சிக்” படத்திற்கு சீக்கிரமே சான்றிதழைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.