மேரி கோல்ட் படத்தின் மூலம் ஹீரோவான ரக்ஷன்
சின்னத்திரை தொகுப்பாளரான ரக்ஷன் அவ்வப்போது திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். பெரும்பாலும் ஹீரோவின் நண்பனாக நடிப்பார். தற்போது அவர் “மேரி கோல்ட்” என்ற படத்தின் மூலம் ஹீரோ ஆகியிருக்கிறார். அவருக்கு ஜோடியாக நம்ரிதா நடிக்கிறார். இந்த படத்தை பிரியன் ராஜேந்திரன் இயக்க,டிரைடெண்ட் ஆர்ட்ஸ் ஆர். ரவீந்திரன் தயாரிக்கிறார். படத்தில் சிங்கம்புலி, வடிவுக்கரசி, இமான் அண்ணாச்சி, விவேக் பிரசன்னா, ஸ்டாலின் மற்றும் வடிவேல் முருகன் ஆகியோர் நடிக்கின்றனர். மேலும் பிரபு மற்றும் சுகன்யா ஜோடி 31 ஆண்டுக்கு பிறகு இணைந்து நடிக்கின்றனர். மல்லிகார்ஜுன் ஒளிப்பதிவு செய்ய, சித்து குமார் இசையமைக்கிறார்.படம் குறித்து இயக்குநர் கூறும்போது “தென் தமிழகத்தின் பின்னணியில், திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி நகரங்களை மக்களின் அழகான வாழ்வியலையும் மையமாகக் கொண்டு ஒரு உணர்வுப்பூர்வ குடும்பக் கதையாக இத்திரைப்படம் உருவாகிறது” என்றார்.
Prev Post
Next Post