Take a fresh look at your lifestyle.

ரசிகர்களுக்கு ரஜினி தரும் டபுள் ட்ரீட்

41

ரசிகர்களுக்கு ரஜினி தரும் டபுள் ட்ரீட்
சூப்பர் ஸ்டார் என்ற அடையாளத்துடன் இந்தியத் திரையுலகில் இன்றும் வசூல் சக்கரவர்த்தியாக இருப்பவர் ரஜினிகாந்த். அவர் தற்போது நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் “ஜெயிலர் 2” படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்தப் படம் அக்டோபர் 15ம் தேதி வெளியாகிறது. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தின் இறுதிக் கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. விரைவில் மலேசியாவில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது. இந்தப் படத்தை அடுத்து அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் “தர்மன்” படத்தில் நடித்து வருகிறார். இதன் முதல் கட்ட ஷூட்டிங் நடந்து முடிந்துள்ள நிலையில், இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு நேற்று முன்தினம் முதல் ஆரம்பமாகி உள்ளது. படப்பிடிப்பைத் தொடர்ந்து நடத்தி சீக்கிரமே முடிக்க உள்ளனர். இதனால் இந்த படத்தை 2027 பொங்கலுக்கு வெளியிட திட்டமிட்டு ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் பணிகளை துவக்கி உள்ளனர். அக்டோபரில் “ஜெயிலர் 2”, ஜனவரியில் “தர்மன்” என ரஜினியின் இரண்டு படங்கள் அடுத்தடுத்து ரிலீஸ் ஆவதால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.