Take a fresh look at your lifestyle.

கருப்பு வைரமாக ஜொலித்த கங்கனா சர்மா

54

கருப்பு வைரமாக ஜொலித்த கங்கனா சர்மா
மும்பை விமான நிலையத்தில் திடீரென அனைவரின் கவனமும் ஒரே பக்கம் திரும்பியது.ஒரு ஆடம்பர காரில் கருப்பு நிற கோட், மாடர்ன் உடை, அகலமான பெல்ட், கழுத்தில் பாரம்பரிய நகை என கவர்ச்சிக்கு வஞ்சம் இல்லாமல் வந்து இறங்கினார் பிரபல பாலிவுட் நடிகை கங்கனா சர்மா. அவரைப் பார்த்த போட்டோகிராபர்கள் போட்டி போட்டு படம் பிடிக்க, அவர்களோடு பயணிகளும் சேர்ந்து படம் எடுக்க விமான நிலைய பகுதி ஃப்ளாஷ் லைட் ஒளியில் பளிச்சிட்டது. இதனால் அவர் கருப்பு வைரமாக ஜொலித்தார்.காரை விட்டு இறங்கிய கங்கனா சர்மா, பறக்கும் முத்தங்களை கொடுத்தபடி உள்ளே சென்றார்.இந்த வீடியோ காட்சிகள் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.