தமிழ் சினிமாவில் மீண்டும் எம்ஜிஆர் பார்முலா வர வேண்டும்: சேரன்
எல்.ஆர்.சுந்தரபாண்டி இயக்கத்தில் ஆரி அர்ஜூனன் நடிப்பில் உருவாகி உள்ள படம் ‘4த் ப்ளோர்’.மனோ கிரியேஷன் சார்பில் ராஜா தயாரித்துள்ள இந்த படம் வருகிற 27-ந் தேதி ரிலீஸ் ஆகிறது. இதையொட்டி படத்தின் இசை, டிரைலர் வெளியீட்டு விழா நடந்தது. இதில் இயக்குனர் சேரன் பேசியது, எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்த போது நம்ம ஊரில் டப்பிங் படங்கள் நிறைய வந்து கொண்டிருந்தது. அப்போது தமிழ் படங்கள் காணாமல் போகிற வாய்ப்பு உருவானது. உடனே எம்.ஜி.ஆர்., எல்லா தியேட்டர்களிலும் 90 நாட்கள் கண்டிப்பாக தமிழ் படங்கள் போட வேண்டும்.இல்லை என்றால் லைசென்ஸ் ரத்து என ஆர்டர் போட்டார். அதுபோல் சிறு படங்களுக்கு 3 மாதங்கள் ஒதுக்க வேண்டும். மீதமுள்ள 9 மாதங்கள் பெரிய படங்களை ரிலீஸ் செய்யட்டும்.சிறு படங்கள் வெளியாகும் நேரத்தில் பெரிய படங்கள் வரக்கூடாது. இதனால் 3 மாதத்தில் 72 சிறிய படங்கள் ரிலீசாகும் என்றார்.
Next Post
