ஆசியாவின் சிறந்த மலைப்பிரதேசங்களின் பட்டியலை பிரபல சுற்றுலா இணையதள நிறுவனமான அகோடா வெளியிட்டுள்ளது.
ஹிமாசலப் பிரதேசத்தின் தலைநகர் சிம்லா முதலிடம் பிடித்துள்ளது. மலைகளின் ராணி என்று அழைக்கப்படும் சிம்லாவில், புகழ் பெற்ற பிஜிலி மகாதேவ் சிவன் கோவில் உள்ளது. இந்த சிவலிங்கம் பனியால் மூடப்பட்டிருக்கும்.
2வது இடத்தில், இலங்கையின் மலையகப் பகுதியில் அமைந்துள்ள நுவரெலியா உள்ளது. இது குட்டி இங்கிலாந்து என அழைக்கப்படுகிறது.
3வது இடத்தில் மலேசியாவின் கேமரன் ஹைலேண்ட்ஸ், 4வது இடத்தில் வியட்நாமின் சாப்பா மலைப்பகுதி உள்ளது. 5 வது இடத்தில் இந்தோனேசியாவின் பான்டுங் மலைத்தொடர், 6 வது இடத்தில் பூடானின் திம்பு, 7 வது இடத்தில் வியட்நாமின் டலாட் மலை உள்ளது.