Take a fresh look at your lifestyle.

தமிழகம் முழுவதும் திமுக அரசின் சட்டம்

110

தமிழகம் முழுவதும் திமுக அரசின் சட்டம் ஒழுங்கு சீர்கேடு மற்றும் போதைப் பொருள் நடமாட்டத்தைக் கண்டித்து அதிமுக சார்பில் இன்று (மார்ச் 17, 2026) பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. திண்டுக்கல் மணிக்கூண்டு பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், திமுக அரசு மக்களைப் பணத்தைக் கொடுத்து ஏமாற்ற நினைப்பதாகக் கடுமையாகச் சாடினார். அப்போது பேசிய அவர், “ஏற்கனவே 5 ஆயிரம் ரூபாய் கொடுத்தார்கள், பிறகு ஹாட் பாக்ஸ் கொடுத்தார்கள், இப்போது சேலை கொடுத்திருக்கிறார்கள். ஆனால், பாவாடை இல்லாமல் எப்படி சேலை கட்டுவது என்று பெண்கள் கேட்கிறார்கள். இப்படி ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டையுமே கேவலப்படுத்தியிருக்கிறார்கள்” என ஒருமையில் சர்ச்சைக்கிடமாகப் பேசினார்.

ஏற்கனவே சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் நடிகை நயன்தாரா குறித்துப் பேசியது பெரும் சர்ச்சையான நிலையில், இப்போது திண்டுக்கல் சீனிவாசனின் இந்தப் பேச்சும் சமூக வலைதளங்களில் கடும் விவாதத்தையும் நெட்டிசன்களின் விமர்சனத்தையும் கிளப்பியுள்ளது.