மாசாக வெளியான கூலி ஃபர்ஸ்ட் சிங்கிள்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள படம் கூலி. இதன் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. ஒரு ஆகஸ்ட் மாதம் 14ஆம் தேதி படம் ரிலீஸ் ஆக உள்ளது. அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தின் முதல் பாடலான சிக்கிடு.. பாடல் நேற்று மாலை வெளியாகி இணையத்தை தெறிக்க விட்டு வருகிறது. அறிவு எழுதியுள்ள பாடலை அனிருத் பாடியுள்ளார். ரஜினியின் டான்ஸ் காட்சிகளோடு, அனிருத், டி ராஜேந்தர், டான்ஸ் மாஸ்டர் சாண்டி ஆகியோர் சேர்ந்து அந்த பாடலுக்கு நடனமாடும் புரோமோ வீடியோ பாடல் வெளியாகி உள்ளது. தற்போது இந்த பாடல் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
Prev Post