கௌரி கிஷன் நடிக்கும் ‘தாரகை’
ஸ்பீட் ரீல்ஸ் ஸ்டுடியோவின் தயாரித்துள்ள படம் ‘தாரகை’. இப்படத்தை க்ரிஷ் எழுதி இயக்குகிறார். கதையின் நாயகியாக கௌரி கிஷன் நடிக்கிறார். மேலும் காளி வெங்கட், ஸ்ரீமன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பெண்களின் வாழ்க்கை, பயணம் மற்றும் அவர்கள் எதிர்கொள்ளும் சூழல்களை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.கௌரி கிஷனின் முகத்தை மையமாகக் கொண்டு, அவரைச் சுற்றிலும் வெவ்வேறு வயது மற்றும் பின்னணியைச் சேர்ந்த பல பெண்கள் பயணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த போஸ்டர், படத்தின் கதைக்களம் குறித்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்த படத்திற்கு சித்து குமார் இசையமைக் கிறார். சுந்தர் சுகுமாரன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
Prev Post