Take a fresh look at your lifestyle.

சுசி கணேசனின் ‘ஒரண்ட’ ட்ரெண்டிங்

36

சுசி கணேசனின் ‘ஒரண்ட’ ட்ரெண்டிங்
நடிகர், நடிகைகள் யார்?தொழில்நுட்பக் கலைஞர்கள் யார்? முதல் பார்வை எப்போது? டீசர் எப்போது? என எந்த விவரத்தையும் வெளியிடாமல், ‘ஒரண்ட’ என்ற தலைப்பால் தனது அடுத்த படத்தை உலகம் முழுவதும் தமிழர்களிடையே பேசுபொருளாக மாற்றியுள்ளார் இயக்குநர் சுசி கணேசன். கதை குறித்தோ, கதாபாத்திரங்கள் குறித்தோ எந்தத் தகவலையும் வெளியிடாத நிலையில், அன்றாட பேச்சுவழக்கில் சாதாரணமாக பயன்படுத்தப்படும் ஒரு வட்டாரச் சொல்லை படத் தலைப்பாக மாற்றியுள்ளார்.தற்போது இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஏறக்குறைய 85% சதவீதம் முடிந்துள்ள நிலையில், மீதமுள்ள பணிகளும் விரைவில் முடிந்து விடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.