நயன்தாராவின் ‘ஹாய்’ படம் ஆகஸ்டில் ரிலீஸ்
அறிமுக இயக்குநர் விஷ்ணு எடவன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘ஹாய்’ . இதில் முன்னணி நடிகை நயன்தாரா முக்கிய கேரக்டரில் நடிக்க, அவருடன் கவின், கே. பாக்யராஜ், பிரபு, ராதிகா சரத்குமார்,வி டி வி கணேஷ்,சத்யன், ‘ஆதித்யா’ கதிர், குரேஷி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு ராஜேஷ் சுக்லா ஒளிப்பதிவு செய்ய, ஜென் மார்ட்டின் இசையமைத்துள் ளார். பேமிலி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த படத்தை ஜீ ஸ்டுடியோஸ், தி ரவுடி பிக்சர்ஸ், செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளனர். இப்படத்தின் வெளியீட்டு தேதி குறித்த காணொளியை படக் குழு வெளியிட்டுள்ளது. அதில் இப்படம் ஆகஸ்ட் மாதம் 14-ஆம் தேதி முதல் வெளியாகும் என தெரிவித்துள்ளனர்.
Next Post