ரிலீசுக்கு ரெடியான லவ் ப்ராஜெக்ட்
நடிகர் பிரதீப் ரங்கநாதனுடன் குறும்படத்தில் இணைந்து பணியாற்றிய அனுபவம் பெற்ற டி.ஐ.கபில், தற்போது லவ் ப்ராஜெக்ட் என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கால் பதிக்கிறார். காதலை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த படத்தை இயக்கி, கதாநாயகனாகவும் நடித்துள்ளார். இதில் கதாநாயகியாக சங்கீதா நடித்துள்ளார். மேலும் சக்திவேல், குண்டு சத்யா, வினோத் விஜய் சேனாதிபதி ஆகியோர் நடிக்கின்றன ர். இந்த படத்துக்கு சாதிக் கபீர் ஒளிப்பதிவு செய்ய, சிமியோன் டெல்பர் இசையமைக் கிறார். படம் பற்றி இயக்குனர் கபில் கூறியது, “காதலை ஒரு புதிய பார்வையில் ரசிகர்களுக்கு வழங்குவதே எங்கள் நோக்கம். மக்கள் மனதில் நீண்ட காலம் நிற்கும் திரைப்படமாக இது இருக்கும். இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் மற்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.
Prev Post
Next Post
