குத்து பாட்டுக்கு ரூ.3 கோடி வாங்கிய சுருதிஹாசன்
இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கத்தில் நடிகர் ராம் சரண் நடித்த பெத்தி படம் ஏப்ரல் 30 ஆம் தேதி வெளியாக இருந்த நிலையில், ரிலீஸ் ஜூன் மாதத்திற்கு ஒத்திவைப்பதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இதில் ஜான்வி கபூர் ஹீரோயினாக நடித்துள்ள நிலையில், ஒரே ஒரு குத்து பாடலுக்கு நடிகை ஸ்ருதி ஹாசன் சிறப்பு நடனமாடி உள்ளார். இதற்காக அவருக்கு ரூ. 3 கோடி சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. ஒரு பாடலுக்கு இவ்வளவு சம்பளம் பெறும் தென்னிந்திய நடிகை இவராகவே இருப்பார். இந்தப் பாடலில் கவர்ச்சி நடனமாட முதலில் சமந்தாவிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அவர் மறுக்கவே சுருதிக்கு அந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.
Next Post