Take a fresh look at your lifestyle.

ஹாப்பி மூடில் அஜித்: அப்செட்டில் ரசிகர்கள்

34

ஹாப்பி மூடில் அஜித்: அப்செட்டில் ரசிகர்கள்
தமிழ் சினிமாவில் தல என்றும் ஏகே என்றும் ரசிகர்களால் அழைக்கப்படும் நடிகர் அஜித் குமார் தனது 54-வது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார். நடிகராக மட்டுமின்றி சிறந்த கார் ரேசராகவும் உள்ள அஜித், பல்வேறு நாடுகளில் நடக்கும் கார் பந்தயங்களில் இந்தியா சார்பில் கலந்து கொண்டு பதக்கங்களை குவித்து வருகிறார். இது மட்டுமின்றி துப்பாக்கி சுடுதல், குட்டி விமானம் இயக்குதல், சமையல் கலை என அனைத்திலும் கை சேர்ந்தவர். இப்படி பல முகங்கள் கொண்ட அஜித் தனது பிறந்த நாளை மனைவி குழந்தைகளுடன் எளிய முறையில் கேக் வெட்டி கொண்டாடினார். அவருக்கு திரை உலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்தனர். இருப்பினும் அவரின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வராதது ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றத்தை அளித்துள்ளது.