Take a fresh look at your lifestyle.

சவாலான கேரக்டர்களில் நடிக்க பிடிக்கும்: துஷாரா விஜயன்

31

சவாலான கேரக்டர்களில் நடிக்க பிடிக்கும்: துஷாரா விஜயன்
இயக்குனர்கள் புஷ்கர் மற்றும் காயத்ரி ஆகியோர் தயாரிப்பில் ஏ.சற்குணம் இயக்கியுள்ள வெப் தொடர் எக்ஸாம்.இதில் துஷாரா விஜயன்,அதிதி பாலன், அப்பாஸ் உள்பட பலர் நடித்துள்ளனர். வரும் 15-ந் தேதி பிரைம் வீடியோவில் வெளியாக உள்ளது. இதை ஒட்டி இதன் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் துஷாரா விஜயன் பேசியது, இத்தொடர் மூலம் முதன்முதலாக டிஜிட்டல் தளத்தில் நான் அறிமுகம் ஆகிறேன். இதில் ஜான்சி என்ற கேரக்டரில் நடித்துள்ளேன். இந்த கதாபாத்திரத்தில் நடித்தது எனக்கு பெரிய சவாலாக இருந்தது. நான் எப்போதும் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்பதில் நம்பிக்கை உள்ளவள். இனி சவாலான கேரக்டர்களில் தொடர்ந்து நடிப்பேன் என்றார்.