ரஜினியுடன் மீண்டும் இணைந்த ஸ்ரேயா
‘சிவாஜி’ படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்தவர் ஸ்ரேயா சரண்.இப்படம் திரைக்கு வந்து 19 ஆண்டுகள் ஆகிறது. இந்நிலையில் ரஜினி தற்போது நடித்து வரும் ‘தர்மன்’ படத்தில் ஸ்ரேயா இணைந்து நடிக்க இருப்பதாகதகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதை உறுதிப்படுத்தும் வகையில் ஸ்ரேயா தனது இன்ஸ்டாகிராமில் ரஜினியுடன் எடுத்த செல்பி புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படத்தில் ரஜினி ‘தர்மன்’ படத்தில் அவர் நடித்து வரும் தோற்றத்தில் இருக்கிறார். மேலும் ஸ்ரேயா அந்த படத்திற்கு ‘இனிய நாள்’ என தலைப் பிட்டிருந்தார். அவர் இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.
Prev Post
Next Post