Take a fresh look at your lifestyle.

அரசன் செட்டில் அனிருத்தின் வைப்

48

அரசன் செட்டில் அனிருத்தின் வைப்
வெற்றிமாறன் இயக்கத்தில்,சிலம்பரசன் டி.ஆர். நடிப்பில் உருவாகி வரும் ‘அரசன்’ படம் தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு கோவில்பட்டியில் நடைபெற்றது.2-வது கட்டப் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து 3-வது கட்ட படப்பிடிப்பிற்காக இசிஆர் பகுதியில் பிரம்மாண்ட அரங்கம் உருவாக்கப்பட்டிருக்கிறது. அதில் சிம்பு கலந்து கொண்டு நடித்து வருகிறார் இதில் முக்கியமான காட்சிகளை வெற்றிமாறன் படமாக்கி வருகிறார் இந்த நிலையில் படப்பிடிப்பு தளத்துக்கு திடீரென வருகை தந்த இசையமைப்பாளர் அனிருத் அங்கு வெற்றிமாறன் சிம்பு மற்றும் தயாரிப்பாளர் தானு ஆகியோருடன் கலகலப்பாக பேசியதுடன் படப்பிடிப்பின் நிலை குறித்து ஆர்வமாக கேட்டறிந்தார். ஏற்கனவே டீசருக்கு அனிருத்தின் பிஜிஎம் பெரிய அளவில் பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.