Take a fresh look at your lifestyle.

ஆங்கில இந்தியன் பெண்ணாக நடிக்கும் ரம்யா ரங்கநாதன்

31

ஆங்கில இந்தியன் பெண்ணாக நடிக்கும் ரம்யா ரங்கநாதன்
ஜமா படம் மூலம் ரசிகர்களிடம் கவனம் ஈர்த்த பாரி இளவழகன், அடுத்ததாக பெரம்பூர் மக்களின் வாழ்வியலை மையமாக கொண்டு அன்பே டயானா என்ற படத்தை உருவாகியுள்ளார். டைரக்ஷன் மட்டுமன்றி ஹீரோவாகவும் நடித்துள்ளார். ஹீரோயின் ஆக ரம்யா ரங்கநாதன் நடிக்க, சேத்தன்,ரோஜா,கோபி,அரவிந்த் ராஜா உள்பட பலர் நடித்துள்ளனர். மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் நியோ கேசில் கிரியேஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்திற்கு பரத் சங்கர் இசையமைத்துள்ளார். வரும் 17-ந்தேதி ரிலீஸ் ஆக உள்ள இப்படத்தின் ஃப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. இதில் நடிகர்கள் சமுத்திரக்கனி, சசிகுமார் மற்றும் படக்குழுவினர் பங்கேற்றனர். விழாவில் நடிகை ரம்யா ரங்கநாதன் பேசியது, நான் இதில் ஆங்கில இந்தியன் பெண்ணாக நடித்துள்ளேன். சென்னையில் இருந்தாலும் பெரம்பூர் பகுதிக்கு சென்றதில் லை.இதன் படப்பிடிப்பிற் காக தான் முதல் முறையாக சென்றேன். மிகவும் அழகாக உள்ள பெரம்பூர் பகுதி, விரைவில் சுற்றுலா தலமாக மாறும் என்றார்.