ஐஸ்வர்யா ராஜேஷின் ‘ஓ! சுகுமாரி’ ட்ரெய்லர் வெளியீடு
அறிமுக இயக்குநர் பரத் தர்ஷன் எழுதி, இயக்கியுள்ள படம் ‘ஓ! சுகுமாரி’. இதில் வீர் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் இருவரும் இணைந்து நடித்துள்ளனர்.இப்படத்தை கங்கா என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் சார்பில் மகேஸ்வரா ரெட்டி மூலி தயாரித்து இருக்கிறார். படத்துக்கு சி.எச். குஷேந்தர் ஒளிப்பதிவு செய்ய,பரத் மஞ்சிராஜு இசையமைத்துள்ளார். இப்படத்தின் டீசர் மற்றும் 2பாடல்கள் வெளியாகி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் ட்ரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. விரைவில் இப்படம் தெலுங்கு மற்றும் தமிழில் வெளியாகியுள்ளது.