இயக்குனராகும் ராகவா லாரன்ஸ் மகள்
தமிழ் சினிமாவில் நடன இயக்குநராக அறிமுகமாகி, அதன் பிறகு நடிகராகவும் நல்ல இடத்தைப் பிடித்தவர் ராகவா லாரன்ஸ். பல படங்களில் துணை நடிகராக நடித்து, கவனம் பெற்ற அவர் தற்போது ஹீரோவாகவும் கலக்கி வருகிறார். அதோடு காஞ்சனா தொடர் ஹிட் படங்களை இயக்கி தன்னை ஒரு இயக்குனராகவும் நிலை நிறுத்திக் கொண்டுள்ளார். தற்போது அவரது நடிப்பில் பென்ஸ் படமும் காஞ்சனா 4 படமும் தயாராகி வருகிறது. இந்த நிலையில் ராகவா லாரன்ஸின் மகள் ராகவி இயக்குநராக அறிமுக மாகவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவில் திரைத்துறை சார்ந்த படிப்பை முடித்த ராகவி, லாரன்ஸ் தயாரிப்பிலேயே முதல் படத்தை இயக்கவுள்ள தாகவும் கூறப்படுகிறது.
Prev Post
Next Post