தயாரிப்பாளர்கள் நலன் காக்கும் அணி அறிமுக கூட்டம்
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கான தேர்தல் வரும் பிப்ரவரி 22, அன்று நடைபெற உள்ளது. இத்தேர்தலில் தயாரிப்பாளர்களின் நலன் காக்கும் அணி சார்பில் தலைவர் பதவிக்கு ஜி.எம். தமிழ்குமரன் போட்டியிடுகிறார். மேலும் துணைத்தலைவர்கள் பதவிக்கு ஆர்.கே. சுரேஷ் மற்றும் எஸ்.கமலக்கண்ணன், செயலாளர்கள் பதவிக்கு ஆர். ராதாகிருஷ்ணன் மற்றும் கமீலா நாசர், பொருளாளர் பதவிக்கு என்.சுபாஷ் சந்திர போஸ், இணைச்செயலாளர் பதவிக்கு சுஜாதா விஜயக்குமார் ஆகியோர் போட்டியிடுகின்றனர். அதோடு மூத்த தயாரிப்பாளர்கள் 26 பேர் செயற்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுகின்றனர். தயாரிப்பாளர்களின் நலன் காக்கும் அணியின் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நடந்தது.இதில் சிறப்பு விருந்தினர்களாக கலைபுலி எஸ்.தாணு, பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி,ஏ.எஸ்.பிரகாசம், வி.சி.குகநாதன், இசையமைப்பாளர் தீனா, இயக்குனர்கள் லிங்குசாமி, சரண் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Prev Post
Next Post