ராஷ்மிகாவின் மைசா டீசர் ரிலீஸ்
நடிகை ராஷ்மிகா மந்தனா தற்போது பாலிவுட் மற்றும் பான்-இந்திய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் அவரது நடிப்பில் உருவாகியுள்ள மைசா படமும் பான் இந்தியா படமாக தயாராகி உள்ளது .அவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘தம்மா’ நல்ல வசூலை ஈட்டியது. அதைத்தொடர்ந்து வெளியான ‘தி கேர்ள் பிரண்ட்’ படமும் நல்ல வரவேற்பை பெற்றது.இந்நிலையில், தெலுங்கு இயக்குனர் ரவீந்திர புல்லே இயக்கி வரும் மைசா படத்தில் ராஷ்மிகா நடித்துள்ளார். இதில் ஈஸ்வரி ராவ், குரு சோமசுந்தரம், ராவ் ரமேஷ் ஆகியோருடன் புஷ்பா 2 பட வில்லன் தாரக் பொன்னப்பா ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இப்படத்திற்கு ஸ்ரேயாஸ் பி. கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்ய, ஜேக்ஸ் பெஜாய் இசையமைக்கிறார். ரசிகர்கள் மிகவும் எதிர்பார்க்கும் இந்தப் படத்தின் டீசர் நேற்று வெளியாகி வரவேற்பு பெற்றது.
