Take a fresh look at your lifestyle.

சிறை விமர்சனம்

68

சிறை விமர்சனம்
ஆயுதப்படை போலீஸ் ஏட்டான விக்ரம் பிரபு வேலூர் ஜெயிலில் கொலைகுற்றவாளியாக இருக்கும் அக்சய்குமாரை சிவகங்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக அழைத்து செல்கிறார்.அவரோடு
போலீஸ்காரர்கள் இருவர் செல்கிறார்கள்.
சிவகங்கைக்கு செல்லும் வழியில் திடீரென அக்சய் குமார் போலீஸ் துப்பாக்கியுடன் தப்பித்து விடுகிறார்.அதன் பின்னர் மீண்டும் சரணடைகிறார். அவரிடம் விக்ரம் பிரபு நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவருகிறது. அது என்ன?என்பதே படத்தின் மீதி கதை.
இயக்குனர் தமிழ் எழுதிய உண்மை சம்பவ கதையை ,ஆயுதப்படை காவலர்களின் பணிசுமை,வலி மற்றும் பல ஆண்டுகளாக சிறையில் இருக்கும் குற்றவாளிகளின் பரிதாப நிலை,அவர்களின் பின்னணி ஆகியவற்றை ரசிக்கும்படியாக படமாக்கியிருக்கிறார் இயக்குனர் சுரேஷ் ராஜகுமாரி.
போலீஸ் ஏட்டு கேரக்டரில் விக்ரம் பிரபு பர்ஃபெக்டாக பிட் ஆகியிருக்கிறார். இதுவரை இல்லாத அளவிற்கு சிறப்பாக நடித்துள்ளார். புதுமுக நடிகராக அறிமுகமாகி இருக்கும் எல்.கே.
அக்சய்குமார் கொலைக்குற்றவாளியாக அழுத்தமான நடிப்பை கொடுத்துள்ளார். ஹீரோயின் அனிஷ்மா உணர்வுபூர்வமான நடிப்பை கொடுத்துள்ளார்.மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு, ஜஸ்டின் பிரபாகரன் இசை படத்திற்கு கூடுதல் பலம்.