காதலிக்க நேரமில்லை: ஸ்ரீ லீலா ஓபன் டாக்
புஷ்பா 2 படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடிய தெலுங்கு நடிகை ஸ்ரீ லீலா. தற்போது சிவகார்த்திகேயன் ஜோடியாக பராசக்தி படத்தில் நடித்து வருகிறார். அதோடு பாலிவுட்டிலும் கால் பதித்து படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் பாலிவுட் நடிகர் ஒருவரை ஸ்ரீலீலா காதலிப்பதாக தகவல்கள் வெளியானது. இதுகுறித்து அவர் கூறியது, எனக்கு இப்போது 24 வயது தான் ஆகிறது. 30 வயது வரை திருமணம் செய்து கொள்ளும் திட்டம் எதுவும் இல்லை. எனது முழு கவனமும் படங்களில் தான் உள்ளது. காதல், கல்யாணம் பற்றி எல்லாம் சிந்திக்க கூட எனக்கு நேரமில்லை.நான் ஒருவரை காதலித்து வருவதாக வரும் செய்தியில் எந்த உண்மை இல்லை என்றார்.
