ஜென்ம நட்சத்திரம்- விமர்சனம்
தயாரிப்பு- அமோகம் ஸ்டுடியோஸ் மற்றும் ஒயிட் லாம்ப் பிக்சர்ஸ்
இயக்கம்- பி. மணிவர்மன்
நடிகர்கள்- தமன், மால்வி மல்கோத்ரா, மைத்திரேயா, ரக்க்ஷா ஷெரின், சிவம், அருள் கார்த்திக், காளி வெங்கட், வேல. ராமமூர்த்தி, முனீஸ்க்காந்த்
ரேட்டிங் – 2.5/5
கதைக்களம்
666 என்ற எண் கொண்ட சாத்தான் குழந்தை ஒன்று காளி வெங்கட்டுக்கு பிறக்கிறது. மற்றொருபுறம் தமன் மனைவி மால்வி மல்கோத்ரா கர்ப்பமாக இருக்கிறார். இந்தக் குழந்தை எப்படி இவர்களிடம் வருகிறது என்பதை பேய் பங்களா செட்டப்பில் பண புதையலை பின் கதையாக வைத்து சொல்லி உள்ளார் இயக்குனர்.
பிளஸ் & மைனஸ்
தமன் உள்ளிட்ட நடிகர்கள் சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளனர். அதேபோல் காளி வெங்கட் முனீஸ்கான் வேல. ராமமூர்த்தி ஆகியோரும் தங்களது அனுபவ நடிப்பை கொடுத்துள்ளனர்.
ஜென்ம நட்சத்திரம் என்ற பழைய படத்திற்கும் இந்த படத்திற்கும் உள்ள தொடர்பு தலைப்பு மற்றும் குழந்தை மட்டுமே.
மற்றபடி இதில் சாத்தான் குழந்தையின் ஆட்டத்தை முழுமையாக காட்டவில்லை. கற்பனையான கதையைநிஜத்தில் சொல்ல முயற்சி செய்து இருக்கிறார் இயக்குனர்
மணிவர்மன். சாத்தானை கடவுளாக நம்பும் கூட்டமும், அவர்களின் நம்பிக்கையும் நிஜமானால் எப்படி இருக்கும்? என்ற கோணத்தில் திரைக்கதையாக நகர்த்தி
இருக்கிறார். இருப்பினும் திரைக்கதையில் சுவாரஸ்யம் குறைவாக இருப்பதால் ரசிக்க முடியவில்லை.
ஒளிப்பதிவாளர் கே.ஜி, காட்சிகளை திகில் ஏற்படுத்தும் வகையில் படமாக்கியுள்ளார்.
இசையமைப்பாளர் சஞ்சய் மாணிக்கத்தின் பின்னணி இசை கதைக்கு ஏற்ப உள்ளது.
ஜென்ம நட்சத்திரம்-ரசிகர்களுக்கு துருவ நட்சத்திரம்