சிறை அக்ஷய் குமாரின் நெக்ஸ்ட்
‘சிறை’ படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இளம் நடிகர் எல் கே. அக்ஷய் குமார் நடிக்கும் புதிய பட ஷூட்டிங் பூஜையுடன் தொடங்கியுள்ளது.இப்படத்தை அறிமுக இயக்குநர் விஷ்ணு அமரன் இயக்குகிறார். கிரைம் டிராமா ஜானரில் உருவாகும் இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் எஸ்.எஸ்.லலித்குமார் தயாரிக்கிறார். இப்படத்தில் அக்ஷய் உடன் சுராஜ் வெஞ்சரமூடு மற்றும் சேத்தன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.இதன் பூஜையில் இயக்குநர்கள் எச்.வினோத், சிறுத்தை சிவா, ஆர்.எஸ்.துரை செந்தில்குமார், சுரேஷ் ராஜகுமாரி, விக்னேஷ் வடிவேல், தயாரிப்பாளர்கள் ஆர்.கே.செல்வமணி, டி.சிவா, தனஞ்செயன்,பைவ் ஸ்டார் செந்தில், பைவ் ஸ்டார் கல்யாண், அருண் விஸ்வா, சபரி மற்றும் ஒளிப்பதிவாளர் ஆர்தர் வில்சன் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.
Prev Post
Next Post