ராக்கா படம் மேகிங்கில் கின்னஸ் சாதனை
அல்லு அர்ஜுன் நடிப்பில், இயக்குநர் அட்லி இயக்கத்தில், உருவாகி வரும் படம் ‘ராக்கா’, இந்த படத்தின் படப்பிடிப்பில் ஒரே நேரத்தில் 37 கலைஞர்களை நிகழ்நேரத்தில் மோஷன் கேப்சர் செய்து புதிய கின்னஸ் சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் இந்திய சினிமாவில் புதிய தொழில்நுட்ப சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. இந்த சாதனைக்கான அதிகாரப்பூர்வ அங்கீகாரம் கடந்த 15-ந்தேதி அன்று வழங்கப்பட்டது. இது குறித்து அட்லி கூறுகையில், ‘சிறுவயதில் கின்னஸ் உலக சாதனைகள் குறித்து மிகுந்த ஆச்சரியத்து டன் கேள்விப்பட்டிருக்கிகேன். ஒரு நாள் நாமே ஒரு சாதனையைப் படைப்போம் என அப்போது நினைத்துக்கூட பார்த்ததில்லை. ஒரே படப்பிடிப்பில் 37 மோஷன் கேப்சர் அசெட்சை ஒன்றிணைத்து இந்த அங்கீகார த்தைப் பெற்றிருப்பது எனக்கு இன்னும் கனவு போலவே இருக்கிறது” என்றார்.