Take a fresh look at your lifestyle.

ரெடியாகுது ‘நந்தன் 2’

1

ரெடியாகுது ‘நந்தன் 2’
‘நந்தன்’ திரைப்படத்தின் மூலம் தலித் பஞ்சாயத்து தலைவர்களின் வாழ்வை அழுத்தமாகப் பதிவு செய்த இயக்குநர் இரா. சரவணன், தனது அடுத்த படைப்பாக ‘நந்தன் 2’ திரைப்படத்தை தற்போது உருவாக்கி வருகிறார்.இரா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை இரா.சரவணன் எழுதி இயக்குகிறார். நிவாஸ் கே. பிரசன்னா இசையமைக்கும் இப்படத்தின் டைட்டில் பர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகி கவனம் ஈர்த்து வருகிறது. தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அதேநேரம் படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளும் நடைபெற்று வருகின்றன. இப்படத்தில் நடிக்கும் நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினர் தொடர்பான முழுமையான விவரங்கள், அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியிடப்பட உள்ளது.