நீளிரா ஒரு எமோஷனலான படம்: ரூபா
ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ தயாரிப்பில், சோமிதரன் இயக்கத்தில் நவீன் சந்திரா நடித்துள்ள படம் ‘நீளிரா’. இதில் நடிகை ரூபா கொடுவாயூர் ஹீரோயினாக நடித்துள்ளார். படம் குறித்து அவர் கூறியது, “எம காதகி படத்திற்கு பிறகு நான் நடிக்கும் 2வது தமிழ் படம் இது. முதல் படத்தை போல் இந்த திரைப்படமும் எனக்கு ஸ்பெஷலானது. நமக்கு போரைப் பற்றி என்ன தெரியும். போர் என்றால் ஆயுதம் இருக்கும், துப்பாக்கி இருக்கும், போராட்டம் இருக்கும். ஆனால் அதற்குள் மக்கள் இருப்பார்கள். அவர்கள் ஒரு எமோஷனலான போரை எதிர்கொள் வார்கள். அதை பற்றி பேசும் படம் தான் நீளிரா. போர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் சூழலில் ஒரு இரவில் நடக்கும் சம்பவங்கள் தான் இப்படத்தின் கதை. ரசிகர்களுக்குள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நான் நம்புகிறேன்.
Prev Post
Next Post