தனுஷுக்கு தான் என் முதல் நன்றி : பவிஷ்
ஜினிமா மீடியா அண்ட் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் தினேஷ் ராஜ் மற்றும் கிரியேட்டிவ் என்டர்டெயின்மென்ட் மற்றும் டிஸ்ட்ரிபியூஷன் நிறுவனம் சார்பில் தனஞ்ஜெயன் ஆகியோர் தயாரிப்பில் மகேஷ் ராஜேந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் லவ் ஓ லவ். இதில் பவிஷ்,நாக துர்கா, செல்வராகவன், கே. எஸ். ரவிக்குமார், வனிதா விஜயகுமார் ஆகியோர் நடித்துள்ளனர்.படத்திற்கு பி. ஜி. முத்தையா ஒளிப்பதிவு செய்ய,வெய்ன் பாவி, பிரதீப் பிஜே. பாக்ஸ் இசையமைத்துள்ளனர். இப்படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் நடிகர் பவிஷ் பேசியது, எந்த மேடையாக இருந்தாலும், எங்கு சென்றாலும் என்ன செய்தாலும் நான் முதலில் தனுஷ் சாருக்கு நன்றி சொல்வேன்.இயக்குனர் மகேஷ் கதை சொல்வதில் சிறந்தவர். ஹீரோயின் நாக துர்கா,ஒரு யூடியூப் பிரபலம். அவர் பயிற்சி இல்லாமல் பார்த்ததுமே நடனம் ஆடி வியக்க வைத்தார் என்றார்.
Prev Post
Next Post