“கொடூரா” பட ஹீரோவான பாலாஜி முருகதாஸ்
யாஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் சார்லஸ் ஆனந்த் இயக்கும் “கொடூரா”.படத்தில் பாலாஜி முருகதாஸ் ஹீரோவாக நடிக்க, நிஷா ஹீரோயினாக நடிக்கிறார். வில்லனாக இலியாஸ் நடிக்க, வாழை ஜானகி அம்மாள்,பேபி தீக்ஷிதா சந்தோஷ் குமார், முத்துக்குமார், அரோரா, டி.எம். கார்த்திக்,திருக்குறளி மற்றும் திவாகர் ஆகியோர் நடிக்கின்றனர். படத்துக்கு விஜய் வெங்கட் ஒளிப்பதிவு செய்ய, சௌகத் அலி இசையமைக்கிறார்.இப்படத்தின் துவக்க விழா சமீபத்தில் நடைபெற்றது. தொடர்ந்து இதன் படப்பிடிப்பு காரைக்கால், தரங்கம்பாடி ஆகிய இடங்களில் நடைபெற்று வருகிறது. மனிதனை மனிதனாக பார்க்க வேண்டும், எவரையும் மனிதத் தன்மையற்ற வர்களாக பார்க்கக் கூடாது எனும் மையக் கருத்தைக் கொண்டு இப்படம் உருவாகி வருகிறது.
Prev Post