Take a fresh look at your lifestyle.

அங்கீகாரம்- விமர்சனம்

56

அங்கீகாரம்- விமர்சனம்
துப்புறவு தொழிலாளியின் மகனான கே.ஜெ.ஆர் தடகள ஓட்டப்பந்தய வீரராக திகழ்கிறார். வறுமைக்கோட்டிற்கு கீழ்வாழும் இவர் உலக விளையாட்டுப் போட்டியில் பங்கேற்று தனது வாழ்வாதாரத்தை உயர்த்த கடும் பயிற்சி எடுத்து காமன் வெல்த் போட்டிக்கு தகுதி பெறுகிறார்.ஆனால் அவரை காமன்வெல்த் போட்டியில் கலந்து கொள்ள விடாமல் அதிகாரிகள் தடுக்கின்றனர்.இதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கிறார்.தகுதி பெற்ற அவருக்கு கோர்ட்டில் நியாயம் கிடைத்ததா? இல்லையா? என்பது தான் மீதிக்கதை.திறமை இருந்தும் தேசிய மற்றும் சர்வதேச விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க முடியாமல் தவிக்கும் வறுமைக் கோட்டுக்கு கீழ்வாழும் மக்களின் வாழ்வாதாரத்தை படம் பிடித்து காட்டியுள்ளார் இயக்குநர் ஜே.பி. தென்பாதியான். இருப்பினும் இரண்டாம் பாதி முழுவதும் கோர்ட் காட்சிகளாகவும், ஸ்டேட்மெண்ட் ஆகவும் இருப்பது பலகீனம்.கதை நாயகனாக லீடு ரோலில் நடித்துள்ள கே.ஜெ.ஆர். கடுமையாக உழைத்து தனது கேரக்டருக்கு நியாயம் சேர்த்துள்ளார். இதேபோல் விஜி வெங்கடேஷ்,ரமா, அஜித் கோஷி, சிந்தூரி விஸ்வநாத், ரங்கராஜ் பாண்டே, மன்சூர் அலிகான் ஆகியோரின் நடிப்பும் படத்திற்கு பிளஸ் ஆக உள்ளது. விஸ்வநாத் ஒளிப்பதிவு மற்றும் ஜிப்ரான் இசை கதைக்கு கொடுத்துள்ளது.