Take a fresh look at your lifestyle.

சண்முக பாண்டியன் படத்தை இயக்கும் திரு

6

சண்முக பாண்டியன் படத்தை இயக்கும் திரு
நடிகர் சண்முக பாண்டியன் நடிப்பில் கடந்த ஆண்டு படைத்தலைவன் படம் வெளியானது. அதனைத் தொடர்ந்து சரத்குமார் உடன் சேர்ந்து கொம்பு சிபி என்ற படத்தில் நடித்திருந்தார். அந்த படம் சில மாதங்களுக்கு முன்பு ரிலீஸ் ஆனது. இந்த நிலையில் கேப்டன் சினி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் 9வது படத்தில் சண்முக பாண்டியன் நடிக்க உள்ளார். இந்த படத்தை சமர், தீராத விளையாட்டுப் பிள்ளை, நான் சிவப்பு மனிதன் போன்ற வெற்றி படங்களை இயக்கிய திரு இயக்கவுள்ளார். மேலும் இந்த படத்தில் நடிக்க உள்ள மற்ற நடிகர்கள் பற்றிய விவரங்களை பின்னர் அறிவிக்க உள்ளனர். இந்தத் தகவலை எல்கே சுதீஷ் எம்பி அறிவித்துள்ளார்.