Take a fresh look at your lifestyle.

மாயபிம்பம் -விமர்சனம்

100

மாயபிம்பம் -விமர்சனம்
கடலூரில் பள்ளி காலம் முதல் நண்பர்களாக இருக்கும் ஆகாஷ், அரிருத்ரன், ராஜேஷ், அருண்குமார் ஆகியோர் கல்லூரிக்கு சென்ற பின்னரும் அந்த நட்பு தொடர்கிறது. இதில் ஆகாஷ் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் மருத்துவம் படித்து வருகிறார். அவருக்கு நர்சாக வேலை செய்து கொண்டு சிதம்பரத்தில் படிக்கும் ஜானகி உடன் பழக்கம் ஏற்படுகிறது. இதனால் அவரிடம் நெருங்கி பழகி தவறாக நடக்க முயற்சிக்கிறார். இது சற்றும் எதிர்பாராத ஜானகி அங்கிருந்து சென்று விடுகிறார். அதன் பிறகு என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதி கதை.
அறிமுக நடிகர்களான ஆகாசும், ஜானகியும் கேரக்டராக வாழ்ந்திருப்பது படத்திற்கு பெரிய பலம் .ரசிகர்களை கண்களால் கைது செய்கிறார் ஜானகி. நண்பர்களாக வரும் மற்ற நடிகர்களும் சிறப்பாக நடித்துள்ளனர் .
காதல் கதையாக மட்டுமின்றி தவறான புரிதல், அதனால் ஏற்படும் விளைவுகள், வலிகளை சொல்லும் உணர்வுபூர்வ படமாக கொடுத்துள்ளார் இயக்குனர் சுரேந்தர். முதல் பாதி சற்று லாக்காக இருந்தாலும் இரண்டாம் பாதி ரசிக்க வைத்தது.நந்தா இசை, எட்வின் சகே ஒளிப்பதிவு ஓகே ரகம்