Take a fresh look at your lifestyle.

இரட்டிப்பு மகிழ்ச்சியில் மாளவிகா மோகனன்

130

இரட்டிப்பு மகிழ்ச்சியில் மாளவிகா மோகனன்
தங்கலான் படத்திற்கு பிறகு நடிகர் கார்த்தி நடிக்கும் சர்தார் 2 படத்தில் மாளவிகா மோகனன் ஹீரோயினாக நடித்து வருகிறார். இதில் முக்கியமான கேரக்டரில் அவர் நடித்து வருகிறார்.இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது.இந்நிலையில், நடிகை மாளவிகா மோகனன் பிறந்தநாளை முன்னிட்டு ‘சர்தார்-2’ படக்குழு அவருக்கு வாழ்த்து தெரிவித்து போஸ்டர் வெளியிட்டுள்ளது. அதேபோல் பிரபாஸ் நடிப்பில் பான் இந்தியா படமாக உருவாகும் ராஜாசாப் படத்திலும் மாளவிகா ஹீரோயினாக நடித்து வருகிறார். ராஜாசாப் பட குழு சார்பிலும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து போஸ்டர் வெளியிட்டு உள்ளனர். இதனால் இரட்டிப்பு மகிழ்ச்சியில் மாளவிகா உள்ளார்.